Home / Uncategories / ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியினை உடனே வழங்கிடுக. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை
ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியினை உடனே வழங்கிடுக. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை
ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியினை உடனே வழங்கிடுக. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை :
மத்திய அரசு அறிவித்துள்ள 3 சதவீத அகவிலைப்படியினை தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். வருடத்திற்கு இருமுறை விலைவாசியின் உயர்வைக் கருத்தில்கொண்டும் புள்ளியல் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 3 சதவீதம் மத்திய அரசு அறிவித்து மத்திய ஊழியர்கள் பயனடைந்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் மாநில ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாதது வருத்தமளிக்கின்றது.ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப் படி உடனடியாக வழங்கிடவும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நிலுவைத்தொகையினை ரொக்கமாக வழங்கிட நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment