TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னை ஐசிஎஃப்-இல் பயிற்சி பணிகள்!



சென்னையில் உள்ள ரயில்வே இணைப்புப் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், பல்வேறு அப்ரண்டிஸ் பயிற்சி பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளோர் இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணிகள்:
கார்ப்பெண்டர்
எலக்ட்ரீசியன்
ஃபிட்டர் 
மெசினிஸ்ட் 
பெயிண்டர் 
வெல்டர்
மொத்த காலியிடங்கள் = 992 

முக்கிய தேதிகள்: 
அறிவிப்பாணை வெளியான தேதி: 20.05.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 20.05.2019, காலை: 09.30 மணி முதல் 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.06.2019, மாலை: 05.00 மணி வரை 
பயிற்சி தொடங்கும் காலம்:01.10.2019க்கு பிறகு
வயது வரம்பு: (01.10.19 அன்றுக்குள்) 
குறைந்தபட்சமாக 15 வயது முதல் அதிகபட்சமாக 24 வயது வரை
பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் போன்றோருக்கு இந்த கட்டணம்
செலுத்த தேவையில்லை.
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் தவிர மற்றவர்களுக்கான கட்டணம்:
ரூ.100
விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:
வங்கிகள் மூலம் செலுத்தும் போது, கீழ்க்கண்டவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
1.அக்கவுண்ட் பெயர்: FA&CAO / ICF
2.அக்கவுண்ட் நம்பர்: 05680210000328
3.வங்கியின் பெயர்: UCO Bank / ICF Colony / Chennai
4. IFSC கோடு: UCBA0000568
5. MICR நம்பர்: 600028006
குறிப்பு:
வங்கி காசோலையில் Remarks-இல் விண்ணப்பதாரரின் பதிவெண்ணை குறிப்பிட வேண்டும். இல்லையேல் விண்ணப்பம்
நிராகரிக்கப்படும்.
கல்வித்தகுதி:
1. முன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால் குறைந்தபட்சமாக, பத்தாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் பயின்று 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. ஐடிஐ படித்தவர்களாக இருந்தால் பத்தாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் போன்றபாடங்களில் பயின்று 50% மதிப்பெண்களில் தேர்ச்சியுடன் பயிற்சி சார்ந்த நேஷனல் ட்ரேடு சான்றிதழை பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
இன்ஜினியரிங் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
பயிற்சி காலம்:
1. ஐடிஐ படித்தவர்கள்: ஒரு வருடம்
2. முன் அனுபவம் இல்லாதவர்கள்: ஒரு வருடம் 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை
பயிற்சிக்கால ஊக்கத்தொகை:
1. ஐடிஐ படித்தவர்கள்: மாதம் ரூ.5,700 முதல் ரூ.7,350 வரைவழங்கப்படும்.
2. முன் அனுபவம் இல்லாதவர்கள்: மாதம் ரூ.5,700 முதல் ரூ.6,500 வரைவழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://pbicf.gov.in/app_mainpage - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு,http://pbicf.gov.in/app2019notification.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment