இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தலைவர் பி.கே.இளமாறன் கூறும்போது, ''அரசு சார்பில் இலவச பயிற்சி அளித்தும் சொற்ப அளவிலான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் ஒருவர்கூட அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர முடியாது என்பது வேதனையளிக்கிறது. இதற்காக அரசுப்பள்ளி மாணவர்கள் திறனற்றவர்கள் என அர்த்தமில்லை. நம் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களும் பயிற்சிகளும் வழங்கப்படுவதில்லை. தேர்ச்சி பெற்றவர்களில் பலர் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளனர். எனவே, 11-ம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு நீட் பயிற்சிகளை வழங்க அரசு முன்வர வேண்டும். புதிய பாடத்திட்டம் சிறப்பாகவும் சிபிஎஸ்சிக்கு நிகராகவும் உள்ளது. இதேபோல், தனியார் நிறுவனங்களுக்கு நிகராக அரசு மையங்களிலும் பயிற்சியின் தரத்தை உயர்த்த வேண்டும். வரும் ஆண்டில் குறைந்தது 100 மாணவர்களாவது மருத்துவப் படிப்புகளில் சேருவதை அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்றார்.
http://dhunt.in/6l7KT?s=a&ss=wsp
0 Comments:
Post a Comment