பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலைத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை 15.06.2019.வெளியிடப்படுகிறது.
இதுதொடர்பாக அதன் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 105 கல்லூரிகளில் 1.50 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பருவத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை ஜூன் 15-ந்தேதி வெளியிடப்படுகிறது. இளநிலை, முதுநிலை மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாகவும், தாங்கள் பயின்ற கல்லூரிகளிலும் தெரிந்து கொள்ளலாம். மேலும், அவர்களின் செல்லிடப்பேசிக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும்.
மறுகூட்டல்,விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு பெற விரும்புவோர் தேவைக்கேற்ப தாங்கள் பயிலும் கல்லூரியில் ஆன்லைன் மூலம் தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டலுக்கு ரூ.300-ம்,விடைத்தாள் நகல் பெற ரூ.300-ம்,மறுமதிப்பீட்டிற்கு இளநிலை பாடப்பிரிவிற்கு ரூ.350-ம், முதுநிலை பாடப்பிரிவுக்கு ரூ.450-ம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment