TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் நடத்தப்படும் 2019-20-ஆம் ஆண்டுக்கான பி.இ. ஆன்லைன் கலந்தாய்வுக்கு 1.33 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு ஜூன் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் பார்வையிட்டு குறைபாடுகள் அல்லது சந்தேகங்களைத் தெரிவிக்க நான்கு நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. புகார்கள் எதுவும் இருந்தால் 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மாணவர்கள் தெரிவிக்கலாம்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 25-இல் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஜூன் 27-ஆம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், ஜூன் 28-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளது.
பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஜூன் 26-ஆம் தேதி தொடங்கி ஜூன் 28 வரை தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற உள்ளது. அதன் பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment