TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


 தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் அனுப்பிய கடிதத்தில் 2018ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூன் 15ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதி நாள் ஜூன் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் www.mhrd.gov.in என்ற இணையதள முகவரியில் நேரடியாக தங்கள் தொடர்பான தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். 2018 ஏப்ரல் 30ம் தேதி வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. இதுதொடர்பான விவரங்களை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி, ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment