TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

வாடிக்கையாளர்களுக்கு பயன் தரும் வகையில், அஞ்சலகத்தில் குறைந்த முதலீட்டில் சேமிப்புக் கணக்குகளை தொடங்க வழிசெய்யப்பட்டுள்ளது.



அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள், ஒரு பார்வை
1. அஞ்சலக சேமிப்புக் கணக்கு:
இந்தியாவின் முதன்மை வங்கிகள் ஆண்டுக்கு 3.5 சதவீத லாபம் அளிக்கும் நிலையில், இதில் 4 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். இதுவும் வங்கிக் கணக்கு போன்ற சேமிப்புக் கணக்கு தான். வெறும் 20 ரூபாய் இருந்தால் இந்தச் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ரூபாய். இணையதள வங்கிச்சேவை மற்றும் செக் புக் போன்ற சேவைகளும் கிடைக்கும்.

2. 5 வருட அஞ்சலக தொடர் வைப்பு நிதி (Recurring Deposit):
இதில் 5 வருட அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்தால் 7.3 சதவீத வட்டி விகித இலாபம் கிடைக்கும். மேலும் மாதம் 10 ரூபாய் முதலீட்டில் அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கை தொடங்க முடியும்.

3. அஞ்சலக டெர்ம் டெபாசிட்:
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் டெபாசிட் செய்து சேமிப்பைத் தொடங்க முடியும். வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் அஞ்சலகத்தில் டெர்ம் டெபாசிட் பெயரில் பெறலாம். இந்தத் திட்டத்தில் ஒரு வருடம் முதல் 3 ஆண்டுகள் வரை 7 சதவீதமும், 5 வருடம் முதலீடு செய்யும் போது 7.8 சதவீத லாபத்துடன் வரி விலக்கும் கிடைக்கும்.

4) அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம்: 
இந்த திட்டம்,மாதாந்திர வருவாய் திட்டம் எனப்படுகின்றது. இதில் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இது 5 வருடத்திற்குப் பிறகு 7.3 சதவீத லாபத்துடன் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் திரும்பப் பெற முடியும். இதுவே ஜாயிண்ட் கணக்காக இருந்தால் அதிகட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

5. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்: 
இதில், 55 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் முதலீடு செய்ய முடியும் என்பதோடு அதில் 8.7 சதவீத லாபமும் கிடைக்கும். குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும்.

6. பிபிஎப்:
 PPF திட்டத்தில் முதலீடு செய்யும் போது 8 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 12 தவணையில் 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

7. தேசிய சேமிப்புப் பத்திரம்:
இந்த தேசிய சேமிப்புப் பத்திர திட்டத்தில் 5 வருடம் முதல் 10 வருடம் வரை மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்யலாம். அதில் 8 சதவீத லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்த முதலீட்டுத் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் பெற முடியும்.

8. கிசான் விகாஸ் பத்ரா: 
7.7 சதவீத வட்டி விகித லாபம் பெறக்கூடிய இந்தத் திட்டத்தின் கீழ், 112 மாதங்களுக்கு முதலீடு செய்யும் போது இரட்டிப்பாக அந்த லாபம் கிடைக்கும்.

9. சுகன்யா சம்ரிதி யோஜனா:
பெண் குழந்தைகளுக்கான இந்த செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில், முதலீடு செய்யும் போது, ஆண்டுக்கு 8.5 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். மேலும் தொடர்ந்து 15 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய முடியும். ஆண்டுக்குக் குறைந்தது 1,000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை 12 தவணைகளாக முதலீடு செய்யலாம். பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பிய பிறகு செல்வ மகள் சேமிப்பு கணக்கு தானாக மூடப்படும். அதன் பிறகு கூடுதலாக எத்தனை ஆண்டுகள் இந்தக் கணக்கில் பணம் இருந்தாலும் கூடுதல் லாபம் ஏதும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment