தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கட்டண விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள்இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குதொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே கல்விக் கட்டணநிர்ணயக் குழு அங்கீகரித்து கட்டணம் நிர்ணயம் செய்துள்ள தனியார் பள்ளிகளின் பட்டியல் மற்றும் கட்டணவிவரம் www.tamilnadufeecommittee.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அந்த பள்ளிகளின் பட்டியலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் தங்கள் மாவட்டத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் பட்டியலுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து, அங்கீகாரம் பெற்றபின்னரும் இதுவரை கட்டண நிர்ணயம் செய்யப்படாத பள்ளிகளின் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். அந்தப் பள்ளிகள் ஒரு மாதத்துக்குள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பித்து, தங்கள் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதுதவிர இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கட்டண விவரத்தின்படி தங்கள் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து, ஜூலை 1-க்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிக்கை அனுப்ப வேண்டும்.
0 Comments:
Post a Comment