தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 95 எக்சிகியூட்டிவ் அசிஸ்டன்ட்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Assts
காலியிடங்கள்: 95
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு கோரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பி.சி.ஏ., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மை பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் திறமைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:www.rrcmas.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://onlinedatafiles.s3.amazonaws.com/docs/DEO_Notificaton.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2019
0 Comments:
Post a Comment