TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்துக்கு...!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் தேர்வர்களின் ஆளறிச் சான்றிதழில் உள்ள குளறுபடிகளை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கான தேர்வு வரும் சனிக்கிழமையும் (ஜூன் 8), தாள் 2-க்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 9) நடைபெறுகின்றன. இந்தத் தேர்வுகளை எழுத விண்ணப்பித்த தேர்வர்களால் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆளறிச் சான்றிதழில் ஒரு சில வகைகளில் புகைப்படம் இடம் பெற வேண்டிய இடத்தில் தேர்வர்களின் கையொப்பம் இடம் பெற்றிருக்கிறது.

தேர்வர்களின் தவறான பதிவால் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆளறிச் சான்றிதழில் புகைப்படம் உள்ள இடத்தில் கையொப்பம் போன்ற வேறு பதிவுகள் உள்ள தேர்வர்கள், 2 புகைப்படங்கள் எடுத்து ஒரு புகைப்படத்தை ஆளறிச் சான்றிதழில் ஒட்டி, அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று அளிக்க வேண்டும். 2-ஆவது புகைப்படத்தை வருகைப் பதிவுத்தாளில் ஒட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் அளிக்க வேண்டும்.
நுழைவுச் சீட்டில் புகைப்படம் சார்ந்த பிரச்னைக்குரிய தேர்வர்கள் தேர்வு எழுத வரும்போது தம்முடைய அசல் அடையாளச் சான்றாக பான் அட்டை, ஆதார் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு மையத்துக்கு கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment