தமிழகத்தில் மொத்தம் 84 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 52 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்களை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
மேலும், 2019-2020ஆம் கல்வியாண்டில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணாக்கர்களுக்கு 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணாக்கர்களின் சுய விபரங்களை பதிவு செய்யும் வசதியுடன் திறன் அட்டைகள் (Smart Cards) தயாரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு திறன் அட்டைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் பழனிசாமி இன்று 7 மாணவ, மாணவிகளுக்கு திறன் அட்டைகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0 Comments:
Post a Comment