பாட புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறை பரிசீலனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக கல்வித் துறையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது.அவை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அமைகின்றது.
இந்த வகையில் , தமிழகத்தில் 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க தனிப் பாடப்பிரிவு என்று ஓன்று இல்லை.
ஆனால் 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொறியியல் படிக்க தனி பாடப்பிரிவை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் ,பாட புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறை பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மருத்துவம் படிக்க விருப்படுபவர்கள் கணித பாடத்தை படிக்க வேண்டாம். மீதமுள்ள 5 பாடங்களான தமிழ்,ஆங்கிலம்,உயிரியல் ,இயற்பியல்,வேதியியல் ஆகிய பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.
மேலும் 10 -ஆம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரு தாள் தேர்வு முறைக்கு பதிலாக இனி ஒரே தாள் தேர்வு முறையை கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment