TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

வரைவு புதிய கல்வி கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பரிந்துரைகள்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள்: 
* நாட்டில் உள்ள கல்வி அமைப்புகளில் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டங்களை மேம்படுத்த, புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். அதை, 'தேசிய கல்வி ஆணையம்' என்று அழைக்கலாம்.

* கல்வி மற்றும் கற்றலில் கவனத்தை தீவிரப்படுத்தும் வகையில், மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயரை மீண்டும், 'கல்வி அமைச்சகம்' என மாற்றலாம். 

* தனியார் பள்ளிகள் தங்களின் கட்டணத்தை சுதந்திரமாக நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆனால், அவை தன்னிச்சையாக கட்டணத்தை அதிகரிக்கக் அனுமதிக்கக் கூடாது. பள்ளி மேம்பாட்டு நிதி,

உள்கட்டமைப்பு நிதி என்ற பெயரில் கல்விக் கட்டணத்தில் எந்தவொரு கணிசமான உயர்வும் இருக்கக் கூடாது. கட்டண அதிகரிப்பு சதவீதத்தை, மாநில பள்ளிகள் ஒழுங்குமுறை ஆணையம் (எஸ்எஸ்ஆர்ஏ) என்ற புதிய ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிர்ணயிக்கும். 

* இந்தி மொழி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும். மும்மொழி கொள்கை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும். 

* இந்தி பேசும் மாநிலங்களில், ஆங்கிலத்துடன், இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை கற்க வேண்டும். இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும். 

* யோகா, நீர் மேலாண்மை, அரசியல் ஆகியவை குறித்தும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

* பள்ளி பொதுத்தேர்வுகளை மாணவர்கள் முழுமையாக தயாரான பின், நினைத்த நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் எழுத அனுமதிக்கலாம். ஒரு பாடத்தில் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினாலும், அத்தேர்வை மீண்டும் எழுத அனுமதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த கல்விக் கொள்கை மூலம் தமிழகம உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சி நடப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்திட்டம் திணிக்கப்படுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழகத்தை சேர்ந்த பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கொள்கை திணிக்கப்பட்டால் பெரியளவில் போராட்டம் வெடிக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தி மொழி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும். மும்மொழி கொள்கை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும். 

பொதுமக்கள் கருத்து கூறலாம்:
மத்திய அரசிடம் கஸ்தூரி ரங்கன் குழு அளித்துள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. மக்கள் தங்களை கருத்துகளை இம்மாதம் 30ம் தேதி வரை nep.edu@nic.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment