TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் முறைகள்!!


விநாயகர் சதுர்த்தி விழா தமிழகமெங்கும் காலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தியானது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்து வருகிற சதுர்த்தி அன்று கோலாகலமாக உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது.
பிள்ளையார் சிலைகளை அவருக்கு உகந்த மலரான எருக்கம் பூ கொண்டு அலங்கரிக்கப்படுகிறது, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்றவைகளாலும் அர்ச்சனை செய்யப்படுகிறது.
விநாயகருக்கு கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என அனைத்தையும் கொண்டு படையல் போட்டு பூஜை செய்யப்படுகிறது.
வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் பிள்ளையாருக்கு படைத்து வழிபடுகின்றனர்.
பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் செய்யப்பட்ட சிலைகள் வீதியெங்கும் வைத்து பூஜை செய்யப்படுவது வழக்கம்.
செலவே செய்ய முடியாமல் போனாலும், மண்ணோ, மஞ்சளோ பிடித்து வைத்து பிள்ளையார் செய்து எருகம்பூவையும், அருகம்புல்லையும் வைத்து வழிபட்டாலே விநாயகர் நமக்கு அருள் புரிவார்.
நம்மால் இயன்றால் பொரியும், அவலும் படைத்து பிறருக்கு அன்னதானம் செய்யலாம், இது விநாயகருக்கு செய்யும் வழிபாட்டு முறைகளில் அதிக அளவில் வரனை அள்ளித்தரும் வழியாகும்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment