TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

350 கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் முதுகலை ஆசிரியர் தேர்வர்கள் அதிர்ச்சி தேர்வு மையங்கள் 50 கி.மீட்டருக்குள் அமைத்திடுக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை







  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2144 முதுகலை ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 க்கான பணித்தெரிவு செய்வதற்கான அறிக்கை 12.06.2019 அன்று தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.  விண்ணப்பத்தாரர்கள் 24.06.2019 முதல் 15.07.2019 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கான தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை நடைபெறும் தேர்வுகளுக்கு 2144 பணியிடங்களுக்கான தேர்வுக்கு சுமார்  1,80,000 பேர்களுக்கு மேல் எழுத உள்ளார்கள். ஆனால்  தேர்வர்களுக்கு 154 தேர்வு மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.
    தேர்வு எழுதும் மையங்கள் சுமார் 300 கிலோ மீட்டரிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். தேர்வினை சிரமமின்றி எழுதிட வழிச் செய்திடும் வகையில் தேர்வு மையங்களை அதிகரித்து  சுமார் 50 கிலோ மீட்டருக்குள் அமைத்துத் தர மாண்புமிகு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து உதவிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment