மாநித்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை:
ஒருங்கிணைந்த குடிமைப்பணித் தேர்வில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பாடத்திட்டத்தில் மொழி பாடமான தமிழை நீக்கிவிட்டு முழுவதுமாக பொது அறிவு வினாக்களாகவே இருக்கும் என்று அறிவித்துள்ளது. இது தமிழ் வழி தேர்வர்களுக்கு மிகுந்த மன உளைச்சளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடத்திட்டம் தமிழர்களை வஞ்சிக்கும் நோக்குடனும் வட மாநிலத்தவர்களுக்கு சாதகமாகவும் இந்த பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதுதாமிழர்களின் உள்ளங்களில் வேதனையை கூட்டுவதோடு இது நாள் வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களை பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது..
தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முதல்நிலைத் தேர்விற்கு தமிழ்மொழிக்கு 100 மதிப்பெண்ணும் பொதுப்பாடப்பிரிவு பொதுஅறிவிற்கு 100 என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தற்போது நேர்முகத் தேர்வுடன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில்லா எழுத்துத் தேர்வு என தனித்தனியாக நடத்தப்பட்டது.ஆனால் தற்போது இரண்டும் ஒன்றாக இணைத்து ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வுகள் என மாற்றப்பட்டு முதல் நிலைத்தேர்வில் முழுமையாக தமிழ்மொழி புறகணிக்கப்பட்டு 175 மதிப்பெண் பிரதான பாடங்களும் 25 மதிப்பெண் மனத்திறன் வளர்ச்சி மனக் கணக்கு உள்ளிட்டவைக்கு என 200 மதிப்பெண் அறிவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்கள் மனதையும் புண்படுத்துவதாக உள்ளது.
மேலும்,முதன்மைத் தேர்வில் தமிழ்மொழி வளர்ச்சி பண்பாடு கலாச்சாரம் திருக்குறளுக்கு முக்கியத்துவம் உள்ளிட்டவையினை மகிழ்ச்சியோடு வரவேற்றாலும் முதல்நிலைத்தேர்வில் வெற்றிப்பெற்றால் தானே முதன்மைத்தேர்விற்கு செல்லமுடியும். தாய்மொழியான தமிழ் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே மூத்தமொழியான தமிழ்மொழியினை இழிவுப்படுத்துவது வேந்தப்புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது என்பதால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போர்க்கால நடவடிக்கை எடுத்து அடிப்படைத் தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தினை சேர்த்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment