தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இனிமேல் பள்ளி முதல்வர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான ரேங்க் முறை நிறுத்தப்பட்டது. மதிப்பெண்கள் மட்டுமே வெளியிடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்னும் பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இனிமேல், ஆசிரியர்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.
அதேபோல, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இனிமேல் பள்ளி முதல்வர் என்று அழைக்கப்படுவார். ஒரே வளாகத்திற்குள் செயல்படும் தொடக்கப் பள்ளிகளின் அதிகாரம் முழுவதும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து பள்ளிகல்வித்துறை இந்த உத்தரவை வழங்கியுள்ளது. ஆசிரியர்களின் பணி, தேர்வு நடத்துதல், விடுமுறை அளித்தல், மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் இனி மேல்நிலைப் பள்ளி முதல்வரே எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment