சென்னை: தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 19,427 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும், தற்காலிக பணியிடங்களாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் தற்காலிக பணியிடங்களுக்கு பணியிட தொடர் நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் காலதாமத்தை தவிர்க்கும் பொருட்டு முதற்கட்டாக முதல்வரின் ஆணைப்படி 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என்று அறிவித்திருந்தனர்.இந்நிலையில், 2017-18ம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்ததையடுத்து அந்த அறிவிப்பின்படி முதற்கட்டமாக 19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment