தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
வேண்டுகோள்
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :
10 ஆம் வகுப்பு ப் பொதுத்தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தினை இரண்டு தாள்களை ஒரே தாளாக குறைப்பது எளிமையாக்குவதாக நினைத்து மாணவர்களிடையே மொழி ஆர்வத்தை குறைப்பதோடு எதிர்காலத்தில் தமிழ் மொழியினை அழிக்கும் முயற்சியாகும்
10ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது, ஒரே தாள் தான் என்று 10.05.2019 அன்று பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்த போதே தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தபோது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவ்வாறு மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.ஆனால் இன்று அரசாணை 161ஐ வெளியிட்டிருப்பது மொழியின் தாக்கத்தை வேரிலே வெந்நீர் ஊற்றி அழிக்கும் நடவடிக்கையாகும். இரண்டாம் தாள் என்பது மொழியினை பிழையின்றி எழுதவும் படிப்பது மட்டுமல்ல மொழி இலக்கணத்தையும் ஆளுமைத்தன்மையையும் வெளிப்படுத்தும் எதிர்காலச்சமுதாயத்தை சவக்குழிக்கு அனுப்பும் முயற்சியாகும். மாணவர்களின் மன அழுத்தம் குறையும் ஆசிரியர்களின் வேலைப்பளுவும் நேரம் விரையும் ஆவதும் குறையும் என்று அரசு தரும் விளக்கம் ஏற்புடையதல்ல மொழியின் வளர்ச்சியும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றிட. மற்றப்பாடங்களுக்கு அகமதிப்பெண் வழங்குவதுபோல தமிழ்மொழிப் பாடத்திற்கும் அகமதிப்பெண் 20 வழங்கிட வேண்டும். மேலும் மாணவர்களின் மனநிலையினை கருத்தில்கொண்டு தன்னம்பிக்கையினை வளர்க்கும் விதமாகவும் தேர்வுகளில் வெற்றித்தோல்வி என்பதை அறவே ஒழித்து மதிப்பெண் முறையினை அகற்றி மதிப்பீடு முறையினை அமுல்படுத்துவதன் மூலம் தற்கொலை எண்ணங்களும் தவிர்க்க முடியும். எனவே தமிழ்மொழியினை காப்பாற்றிட அரசாணை 161ஐ திரும்பப் பெற்றிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment