தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை தினந்தோறும் புதுப்புது அறிக்கைகள் சில மாற்றங்கள் வரவேற்புக்குரியது. ஆனால் கல்வித்துறை சீர்த்திருத்தங்கள் என்ற பெயரில் அரசுபள்ளிகளை அழிவுப்பாதைக்கு எடுத்துச்செல்லுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொழிப்பாடங்களை ஒரு தாளாக மாற்றியது 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் 16.09.2019 சுற்றறிக்கையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அரசு பள்ளிகளில் தலையிட்டு கற்றல் மருத்துவம் உளவியல் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கியிருப்பது படிக்கும் மாணவர்களிடையே மன உளைச்சலும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். மனநலமும் உளவியல் ரீதியாக பாதிக்கும். மேலும் மாணவ,மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
ஆசிரியர்கள் முறையாக பயிற்சிப்பெற்றவர்கள் மன உளவியலுக்கு ஏற்ப மாணவர்களின் குடும்பச்சுழல் அறிந்து அணுகி தொடர் கண்காணிப்பின் மூலமாகவே கற்பித்தல்-கற்றல் நிகழ்வு ஏற்படும்.திடிரென்று புதியவர்கள் கற்பித்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டால் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதோடு கற்றல் பணி பெரிதும் பாதிக்கும். இயக்குநரின் சுற்றறிக்கையில் கற்றல் கற்பித்தல் பணி மற்றும் தேர்வு பாதிக்காத வகையில் என்றால் எந்த நேரத்தில் அல்லது விடுமுறை காலத்திலா என தெளிவாக குறிப்பிடவில்லை. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பள்ளி வளர்ச்சி, உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றிற்கு பயன்படுத்தலாமே தவிர கற்பித்தல் நிகழ்வுகளில் ஈடுபடுத்தினால் மாணவர்களின் மனநலம் பாதிப்பதோடு பாதுகாப்பிற்கும் உறுதியில்லை.மேலும் ஆசிரியர்களின் மீதுள்ள நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. தேசியக்கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையிலும் உள்ளூர் கல்வியாளர்கள் கொண்டு பாடம் நடத்தவேண்டும் என்பதை நீக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கும்,மாநில அரசும் வலியுறுத்திட. கருத்துரைகள் வழங்கியிருக்கின்றோம். இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை தேசியக்கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளதை அமல்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை முனைப்பபுக்காட்டுவது வேதனையளிக்கிறது.அரசு பள்ளிகளை காப்பாற்றிடவும் மாணவர்களின் நலன்கருதியும் மாண்புமிகு முதலமைச்சர் உரிய நடவடிக்கை அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment