தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை 164. ல் 2019-2020 ஆம் கல்வியாண்டில் மாநிலப்பாடத்திட்டத்தில் நடக்கும் அனைத்துவகை பள்ளிகளில் படிக்கும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு விதிவிலக்கு என்பதும் ஏற்புடையதல்ல.
இது போன்ற தேர்வுகள் மூலம் மாணவர்களிடையே தன்னம்பிக்கை வளர்க்கும்.அதே வேளையில் தேர்வு ஒழுக்கமும் தேர்வினைப்பற்றிய அச்சமும் தவிர்க்கும்.இதுபோன்ற பொதுத்தேர்வுகள் மாவட்ட அளவில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டு வந்தது.
தற்போது கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது என்று அரசாணை 164 ல் குறிப்பிடுகிறார்கள். அப்படியானால் மாநில அளவில் தேர்வுத்துறை மூலமாக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாநில அளவில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் மாணவர்களின் மனநலம் பாதிப்பதோடு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும்.
இது மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கல்வித்தரத்தினை உயர்த்துகின்றேன் என்று கூறி குழந்தைகளின் மீது ஒருவிதமான மறைமுகமாக வன்முறை தாக்குதலாகவே கருதப்படுகிறது. ஒருபுறம் கட்டாய கல்விஉரிமை சட்டம் 2009 ன்படி 8 ஆம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி மறுபுறம் குழந்தைகளின் மனநலம் பாதிக்கும் வகையில் பொதுத்தேர்வு திணிப்பு. குறிப்பாக அரசுப்பள்ளிகளில் 10 வயது நிரம்பிய எந்தவிதமான அடிப்படைக் கல்வியுமின்றி 5 ஆம் வகுப்பும் அதேபோன்று 13 வயது நிரம்பியோரை 8 ஆம் வகுப்பும் நேரடியாக பள்ளிகளில் சேர்த்து வருகின்றோம். இம் மாணவர்கள் பொதுத்தேர்வு என்ற அச்சத்தால் படிப்பினை பாதியில் நிறுத்துவதோடு வாழ்க்கையும் கேள்விக்குறியாகும்.
ஆகையால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேர்வினையே பின்பற்றிட வேண்டும். தேர்வில் வெற்றித் தோல்வி என்பது இடைநிற்றலை அதிகரிக்கும் என்பதால் அரசாணை 164 னை திரும்பப் பெறும்படி மாண்புமிகு முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment