TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

காலாண்டு விடுமுறை ரத்தா- மாணவர்களின் கனவுகளை களவாடும் பள்ளிக்கல்வித்துறை முதல்வர் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை:


மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :
  தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த  பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் செயல்முறைகள் அறிக்கை 09.09.2019 ன்படி மகித்மா காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் நினைவு விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு அனைத்துவகைப் பள்ளிகளிலும் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை மற்றும் காந்திய மதிப்புகளை மையமாக வைத்து 23.09.2019 முதல் 02.10.2019 வரை செயல்திட்டங்கள் வழங்கி பள்ளிகளில் செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுது. இது ஒட்டுமொத்த மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.  மாணவர்கள் மனசு மகிழ தன் உறவுமுறைகளுடன் அன்பினை பறிமாறிக்கொள்ள திட்டமிட்டிருந்த ஆசையில் இடிவிழுந்த மாதிரி உள்ளார்கள்.மாணவர்களின் கனவுகளை  கனவுகளை கசக்கி எறிந்துவிட்டு கற்றல் மனசு எப்படி செல்லும்?
  அதுமட்டுமின்றி காந்தியடிகள் வாழ்க்கை முறையினையும் மதிப்புகளையும் அறிந்திட விடுமுறை காலங்களை தேர்வுசெய்தால் உண்மையாக அது உள்ளத்தில் பதியுமா என்பது கேள்விக்குறியே .
      மேலும் காலாண்டுத்தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணியினை ஆசிரியர்கள் விடுமுறை காலத்தைத்தான் பயன்படுத்தமுடியும் அதுமட்டுமின்றி தன் குடும்பங்களோடு வாழ்வதும் விடுமுறை காலங்களில் மட்டுமே. பெரும்பாலான ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களில் பணிபுரிவதில்லை. அதற்கான வழியுமில்லை.மேலும் பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிக்கையும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் ஒரு அறிக்கையும் வெளியிடுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒட்டுமொத்த மாணவர்கள் பெற்றொர்கள் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது மட்டுமின்றி மாணவர்கள் பள்ளிக்கு வந்துபடிப்பதே கேள்விக்குறியாகிவிடுமோ அச்சம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிப்பது ஓய்வுக்காக அல்ல கற்றல் கற்பித்தலில் தங்களை புதுப்பித்துக்கொள்வதற்காகவே என்ற உளவியல் கோட்பாட்டை அறியாதது வேதனையளிக்கின்றது.மாணவர்கள் -ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் நலன்கருதி  மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பழைய நடைமுறையே தொடர்ந்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் - 98845 86716






Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment