ஈரோடு
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டு வர நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மன்சூர் அலி தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இவர், கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இல்லத்தில் கே.ஏ.செங்கோட்டை யனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை அமைச்சர் செங்கோட்டை யன் சால்வை அணிவித்து பாராட்டி னார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதை பெற்று, தமிழகத்துக்கும், தமிழக அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
புதிய பாடத்திட்டத்தை ஆசிரியர் கள் புரிந்து கொள்வதற்காக தற்காலிக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு தொடங்கி உள்ள கல்வி தொலைக் காட்சி மூலம் பாடம் நடத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பின்லாந்தில் நடைமுறையில் உள்ள கல்வி முறையை இங்கு செயல்படுத்த அதிக நிதி தேவைப் படும். இதுகுறித்தும், பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைப்பது குறித் தும் முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.
பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். இருந்தாலும் இது குறித்து அரசு ஆய்வு செய்யும்.
ஆசிரியர்கள் தேர்வு முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியும்.
தற்போது பணியில் உள்ள 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை பெற்ற பின்னர் அவர்கள் தேர்வு எழுதினால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்
0 Comments:
Post a Comment