TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

இரவு தூங்கும் முன் என்ன சாப்பிட வேண்டும்?


இரவில் தூங்கும்போதும் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவதற்கும், தூக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இரவில் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். கார்போஹைட்ரேட் கலந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவு வகைகளையும் தவிர்த்துவிடுங்கள்.

காய்கறிகள், சூப், சாலட் வகைகளை இரவில் சாப்பிட வேண்டும். மஞ்சள், இஞ்சி, லவங்கப்பட்டை போன்ற மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகளையும் உட்கொள்ளலாம். அவை உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவும். இரவு உணவுடன் சிறிது நெய் சேர்த்துக்கொள்வதும் நல்லது.

அதேவேளையில் பசியை உணரும்போதுதான் சாப்பிட வேண்டும். இரவில் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு விடுவது நல்லது. ஏனெனில் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகுவதற்கு காலஅவகாசம் தேவை. சாப்பிட்ட உடனேயே தூங்கினால் செரிமான கோளாறு ஏற்படும். இரவு நேரத்தில் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment