பி.கே.இளமாறன் அறிக்கை :
மாணவர்களின் ஒழுக்கம், கல்வி இணைசெயல்பாடுகள் மற்றும் தொடர் வகுப்பறை ஈடுபாடுகளின் தொடர் மதிப்பீடுகளின் அடிப்படையின் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் அகமதிப்பெண் (Internal Mark) 10 வழங்குவது போல 10 ஆம் வகுப்பிற்கும் அகமதிப்பெண் வழங்கிட வேண்டும்.இதன் மூலம் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபாடுடன் பங்கேற்க வழிவகுக்கும்.அகமதிப்பெண் வழங்கப்படுவதால் மாணவர்கள் தங்களின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் என்பதை உணர்ந்து அகமதிப்பெண் முழுமையாகப் பெறுவதற்கு ஏற்ப முயற்சியினை துரிதப்படுத்தும் போது ஆர்வத்துடன் கற்றல் செயல்பாடுகள் வெற்றிப்பெறும்.10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் நூறு சதவீதம் வெற்றிப்பெற உதவும். ஆகையால் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் அகமதிப்பெண் வழங்குவது போல 10 ஆம் வகுப்பிற்கும் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment