Income Tax Return File 2019: : 2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரியை 2019 ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்?
வருமான வரிதாக்கல் செய்ய, பான் எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், படிவம் 16, முதலீட்டு விவரங்கள் போன்றவற்றை முக்கியம்
வருமான வரிதாக்கல் செய்ய, பான் எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், படிவம் 16, முதலீட்டு விவரங்கள் போன்றவற்றை முக்கியம்
வருமானவரி தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள்
1: www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணைப்பிற்கு சென்று பயனர் ஐடி(பான் எண்), கடவுச்சொல், பிறந்த தேதி, கேப்ட்சா குறியீடு உள்ளிட்ட விவரங்களை அளித்து உள்நுழைய வேண்டும்.
2: இந்த இணையதளத்தில் உள்நுழைந்த பின், e-File என்பதற்கு சென்று Prepare and Submit ITR Online என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
3: ITR 1/ITR 4S-ல் எந்த படிவம் என்பதையும், எந்த ஆண்டுக்கு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
2018- 19 நிதியாண்டுக்கு 2019-2020 மதிப்பீட்டு ஆண்டை தேர்வு செய்ய வேண்டும்.
2018- 19 நிதியாண்டுக்கு 2019-2020 மதிப்பீட்டு ஆண்டை தேர்வு செய்ய வேண்டும்.
4: குறித்த படிவத்தை தேர்வு செய்த பின், ஆதார் எண், சம்பள விவரங்கள், பிரிவு 80சி கீழ் வரி விலக்கு பெற கூடிய விவரங்களை அளித்த பின் சேமிக்க வேண்டும்.
5: அடுத்து செலுத்த வேண்டிய வரி எவ்வளவு, திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு போன்றவற்றை சரிபார்த்து, வங்கி கணக்கு போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
6: மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை அளித்த பின், படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
7: அடுத்து ஆன்லைன் மூலம் சரிபார்ப்பை செய்ய டேஷ்போர்டுக்கு சென்று View Returns/Forms எபதை தெரிவு செய்ய வேண்டும்.
8: அடுத்த பக்கட்தில் வருமான வரி தாக்கல் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
9: பின், மின்னணு சரிபார்ப்புக்கான தெரிவை செய்து, ஆதாரின் மொபைல் எண்ணிற்கு வரும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். இந்த படிகளை முறையாக செய்தல், வருமான வரி தாக்கல் வெற்றிகரமாக அமையும்.
மின்னணு சரிபார்ப்பு செய்யவில்லை என்றால் இந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு தபால் மூலம் பெங்களூருவில் உள்ள மதிய நேரடி வருமான வரி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
0 Comments:
Post a Comment