TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து கருத்து தெரிவிக்க இன்று கடைசி நாள்

புதிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக மாநில அரசிடம் கருத்துகளை தெரிவிக்க இன்று கடைசி நாளாகும்.

புதிய தேசிய கல்வி கொள்கை யின் வரைவு அறிக்கையை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட் டது. மொத்தம் 484 பக்கங்கள் அடங்கிய அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே மனிதவளத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் www.mhrd.gov.in பதிவேற்றம் செய்யப்பட் டிருந்தது.

தமிழில் மொழிமாற்றம்
இதுகுறித்து கருத்துகள் தெரிவிக்க ஜூலை 31-ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிலையில் வரைவு அறிக்கையை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழில் மொழிமாற்றம் செய்து www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிட்டது.
இதை ஆசிரியர்கள், பெற்றோர் கள், கல்வியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பார்வை யிட்டு கருத்துகளை தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு விடுத் தது. இதையடுத்து ஆயிரக்கணக் கானவர்கள் தங்கள் கருத்துகளை தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் கல்வித்துறைக்கு அனுப்பி வருகின்றனர். கருத்துகளை பதிவு செய்வதற்கான அவகாசம் இன்று டன் (ஜூலை 25) முடிவடைகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் scert.nep2019@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக தங்கள் கருத் துகளை தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசிடம் அறிக்கை
கல்வித் துறைக்கு வந்துள்ள கருத்துகள் மற்றும் மண்டல வாரியாக நடத்தப்பட்ட கூட்டங் களில் வைக்கப்பட்ட பரிந்துரை களை ஒருங்கிணைத்து தமிழகத் தின் நிலைப்பாடு மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்பிக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment