அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 413 வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு்ளது. வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கப்பெற்ற உடன் அடுத்த 24 மணி நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அந்த ஸ்மார்ட் கார்டில் மாணவர்களின் புகைப்படம், ரத்த வகை, முகவரி, குடும்ப விவரம், ஆதார் விவரம் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கார்டில் மாணவர்கள் பயிலும், மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் குறித்த விவரம் உள்ளிட்டவை குறித்து அறிந்துக் கொள்ளாலாம். இந்நிலையில் அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 12 கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் இந்த கார்டுகள் வழங்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment