இந்திய மருத்துவ படிப்பில் தற்பொழுது கடைபிடித்து வந்த நீட் தேர்வு ரத்தாகிறது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதற்கான மசோதா தயாராகி தயாராகி வருகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை படிப்புகளுக்கும் எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது இந்த கவுன்சில் தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் வரைவு மசோதா மத்திய அரசு சுகாதார அமைச்சகம் உருவாக்கி உள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு நாடு முழுவதும் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் என்ற பெயரில் பொதுவான தேர்வு நடத்தப்படும் அந்தத் தேர்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment