மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :
ஆசிரியர்கள் 58 வயது முடிந்து வயது முதிர்வு காரணமாக கல்வியாண்டின் இடையில் ஓய்வுப்பெற்றால் மாணவர்களுக்கு கற்றல் நிகழ்வு தடையில்லாமல் நடந்திட கல்வியாண்டு முடியும்வரை மறுநியமனம் பணிநீட்டிப்பு (supranation ) வழங்கப்பட்டுவந்தது.
தற்போது ஆசிரியர் இந்த கல்வியாண்டில் ஓய்வுப்பெறும்போது அதே நாளில் ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு வழங்கி பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவர் எடுத்துவந்த வகுப்புகளில் மாணவர்களுக்கு புதிய ஆசிரியர் பாடம் எடுப்பது உளவியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்படுவதோடு புரிதலிலும் சிரமம் ஏற்படும்.
இந்நிலையில் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜுன் மாதம் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு (Supranation) வழங்காமல் பணியிலிருந்து விடுவித்திட ஆணை வழங்கிவருவது வருத்தத்தையளிக்கிறது.
மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு அரசாணை எண் 261 ஐ ரத்துசெய்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் .
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment