தமிழகத்தில் ஆண்டுதோறும் 10, 11, 12ஆம் ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும். அந்த வகையில், நடப்பு ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்வுக்கான அட்டவணை தற்போது வெளியிட்டப்பட்டுள்ளது.
அதன்படி, பத்தாம் வகுப்புக்கு 2020, மார்ச் 17ஆம் தேதி தொடங்கும் தேர்வானது ஏப்ரல் 9ஆம் தேதி முடிவடைகிறது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2ல் தேர்வுகள் தொடங்கப்பட்டு மார்ச் 24ஆம் தேதி நிறைவடைகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிகள் மே 14ஆம் தேதியும் வெளியிடப்படுகிறது. மேலும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment