முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் காமராஜரை நினைவுகூரும் வகையில் பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

0 Comments:
Post a Comment