இந்த சட்டத்தின் நான்காவது பிரிவில், 16 முதல் 17 வயது குழந்தைகளின் மீது நடத்தப்படும் கட்டாய வல்லுறவுக்கான தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 வயதுக்கும் குறைவான குழந்தைகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலுக்கான தண்டனை 20 வருடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் ஆபாச படங்களை கம்ர்சியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவது / பார்ப்பது / சேமித்துவைப்பது ஆகியவையும் குற்றமே. அவை கண்டறியப்பட்டால் அதற்கான தண்டனை மூன்று முதல் 5 ஆண்டுகளாகும். அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சட்ட மசோதா நிறைவேற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசு தரப்பு அறிவிக்கின்றது. மேலும் தேசிய குற்றப்பதிவு ஆணையம் 2016ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி, 3%க்கும் குறைவான, குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்கள் நீதிமன்றங்களுக்கு வருகின்றன. பாதிக்கப்படும் அனைத்து தரப்பினருக்கும் உண்மையான நீதி கிடைக்க இந்த மாற்றங்கள் உருவாக்கப்பட்டதாக அறிவித்துள்ளது இந்திய அரசு.
About Tnta
Am facilitator
0 Comments:
Post a Comment