TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

நடப்பு நிதியாண்டுக்கான (2019-20) மத்திய பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள் இதோ...


  1.  3 லட்சம் கோடி டாலர் எனும் அளவை நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் கடக்கும்.
  2. இந்தியாவின் சர்வதேச கடன் அளவு நாட்டின் ஜிடிபியில் 5 சதவிகிதத்துக்குள் உள்ளது.
  3. உள்நாட்டுக் கடன் வளர்ச்சி 13.8 சதவீதம் அதிகரிப்பு.
  4.   சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு. 
  5. நாடு முழுவதும் சம அளவில் மின்சார வினியோகம் அளிக்கும் விதத்தில் 'ஒரே நாடு ஒரே மின் வினியோகம்' திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 
  6. 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார இணைப்பு இல்லாத வீடே இல்லை என்கிற நிலை ஏற்படும்.
  7. பாரத்மாலா மற்றும் சாகர்மாலா ஆகிய திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது.
  8. கடந்த 5 ஆண்டுகளில் 657 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  9. 2030ம் ஆண்டு வரை ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது; தண்டவாளங்கள் அமைத்தல் பயணிகள் ரயில் இயக்கம் மற்றும் சில கட்டுமானப் பணிகள் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு நடைபெறும்.
  10. ஆண்டுதோறும் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும்.
  11. வருமான வரி விலக்குப் பெறுவதற்கான உச்சவரம்பில் (ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை) மாற்றம் இல்லை.
  12. ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி
  13. ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்தால் 2% வரி பிடித்தம்.
  14. பான் அட்டை இல்லையென்றால் ஆதார் எண்ணை சமர்ப்பித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்.
  15. தங்கம் இறக்குமதி மீதான வரி 10%ல் இருந்து 12% ஆக உயர்வு.
  16. பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி விதிப்பு
  17. 15 ஆண்டுகள் வீட்டுக் கடனுக்கு ரூ.7 லட்சம் வரை மிச்சமாகும்.
  18.  குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் கூடுதல் வரி விலக்கு பெறலாம்.
  19. கடனில் வாங்கப்படும் மின் வாகனத்துக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
  20. கடந்த 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக (78%) உயர்ந்துள்ளது.
  21. ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு 25% வரி விதிக்கப்படும். (99.3%  நிறுவனங்கள் 25% வரி வரம்புக்குள் உள்ளன)
  22.  ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு முறைகள் தளர்த்தப்படும்.
  23. பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு குறைந்தபட்சம் 51% ஆக நீடிக்கும்.
  24. அரசு பங்கு விற்பனை மூலம் பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்.
  25. ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கம்.
  26.  புறநகர் ரயில் சேவையை அதிகரிக்கத் திட்டம்.
  27. 2030ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை.
  28. உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கும் குறைந்த கட்டண விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  29. சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த ஆற்றுவழி போக்குவரத்து மேம்படுத்தப்படும்.
  30. நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு.
  31.  வங்கிகளில் வாராக் கடன் கடந்தாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
  32. பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
  33. முக்கிய சுற்றுலா தலங்களை சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை; அதன்படி, 74 புதிய சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும்.
  34.  இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் கார்டு.
  35. எல்இடி பல்புகள் மூலமாக ஆண்டுக்கு ரூ.341 கோடி அளவுக்கு மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது.
  36. சூரிய சக்தி அடுப்புகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும்.
  37.  கழிவு நீர் மற்றும் சாக்கடைக் கழிவுகளை அகற்ற ரோபோக்கள் பயன்படுத்தப்படும்.
  38. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் கல்வித் தரம் உயர்வு
  39.  உலகின் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் 3 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
  40.  இந்தியா விரைவில் உயர் கல்வி மையமாக மாறும்.
  41. வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் 'இந்தியாவில் படியுங்கள்' திட்டம்.
  42.  'விளையாடு இந்தியா' திட்டம் விரிவுபடுத்தப்படும். 
  43. தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்.
  44. சர்வதேச அளவில் போட்டியிட இந்திய மாணவர்கள் தயாராகும் வரை உயர்கல்வித் துறையில் புதிய கொள்கை.
  45. சர்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
  46. புதிய தொழில் நிறுவனங்களுக்காக சிறப்பு தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும்.
  47.  நாடு முழுவதும் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
  48.  சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தாலும், இந்தியாவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
  49. காப்பீட்டுத் துறையில் இடைநிலை அமைப்புகளுக்கு 100% அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்.
  50.  சில்லறை மற்றும் வணிகம், விமானத் துறை உள்ளிட்டவற்றில் கூடுதல் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்.
  51.  ஊடகத் துறையில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்.
  52.  2024ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் உறுதி செய்யும் 'ஹர் கர் ஜல் (ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்)' திட்டம் .
  53.  உணவுத் துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாற்றம்.
  54. வேளாண் துறை சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.
  55. விவசாயத் துறையில் தனியார் பங்களிப்பு அதிகம் தேவை.
  56. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவோம்.
  57.  கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
  58.  ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2022ம் ஆண்டுக்குள் கேஸ் இணைப்பு.
  59. நாடு முழுவதும் 1.95 கோடி வீடுகள் கட்டி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
  60. அனைத்து ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பத்தினருக்கும் 2022ம் ஆண்டுக்குள் சொந்த வீடு.
  61.  அனைவரும் வசதியான வகையில் வீடுகளில் வசிக்க நடவடிக்கை.
  62. ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குக் குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment