TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

tnta

 


















பெறுநர் :

மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள்,

பள்ளிக் கல்வித்துறை,

சென்னை -6.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

 

1 .தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதியக் கழிவறைகள் ஏற்படுத்தி தரவேண்டும்.

 சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்..

 

2. அனைத்துபள்ளிகளிலும் நிரந்தரமாக குமாஸ்தா, இரவுகாவலர்கள் பணியமர்த்திடவேண்டும்.

 

3. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சட்டமன்றமேம்பாட்டு நிதி மூலம் வளவகுப்பறை (SMART CLASS) அமைத்திட வேண்டும்

4. இயற்கை பேரிடர் காலக்கட்டத்திலும் கல்வி பாதிக்காத வகையிலும் தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி கல்வி கற்கும் வகையில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மடிக்கணினி அல்லது கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட வேண்டும்

 

5. நீட் தேர்வை ரத்து செய்வது அரசு முயற்சி மேற்கொண்டு வந்தாலும் மாணவர்களின் தன்னம்பிக்கை தளராத வகையில் தேர்வுக்கு தயாராகும் எண்ணத்தை உருவாக்கும் வகையில் 11,12 ஆம் வகுப்பில் மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மாவட்டம் தோறும் தரமான இலவசமாக பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும் .         


6. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம் பள்ளி முழுமையாக திறப்பதற்கு முன்பே ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவேண்டும்

 

7. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆசிரியர்களில் பணிமூப்பு  பாதிக்கப்படாதவகையில் கலந்தாய்வின் போது சிறப்பு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

 

8. ஆசிரியர்களும் உயர்பதவிப்பெறும் வகையில் 25% மாவட்டகல்வி அலுவலர்கள் நேரடி நியமனம் செய்யப்படுவது போன்றே நேரடி நியமனம் மூலம் DEO to CEO முதன்மைக் கல்வி அலுவலர் பதவி உயர்விலும் 25% கடைபிடிக்கப்பட வேண்டும்.பதவி உயர்வில் வந்த DEO க்களுக்கு 50 % CEO பதவி உயர்வு வழங்க வேண்டும்.

 

9. கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்யப்படும்போது அரசு பள்ளிகளில் பணிபுரியும் தகுதிவாய்ந்த SLETமற்றும்(NET) Phd தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்று  கல்வி அனுபவம்  உள்ளவர்களுக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

 

10. ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தில் மத்திய அரசு போன்று அனைத்து விதமான நோய்களுக்கும் பயன்பெறும் வகையில்  மாற்றியமைக்கப்பட வேண்டும்.

11. ஆசிரியர் பணிநியமனம் வயதுவரம்பு 40 மற்றும் 45 என்பதை ரத்துசெய்து பழையமுறையினை அமுல்படுத்திடவும்.

12. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களை 25% தனியார் பள்ளிகளில் சேர்ப்பதினை அரசு மேற்பார்வையிட வேண்டும் ஆனால் அரசே மாணவர்களை தேர்வுசெய்து சேர்ப்பதால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கும். மேலும் அதற்கான மானிய தொகையை அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும்                    


13 . 2018 - 19 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ச்சி பெற்று 1:2 சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி  ஆசிரியர்களுக்கு பணி நியமனம் குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும்.

 

14. ஆசிரியர் தகுதி தேர்வு டெட் 2013 ல் இருந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி பெற்ற ஆண்டு மூப்பு அடிப்படையில் பணி வழங்கவேண்டும்.

 

15. பள்ளி வளர்ச்சி நிதிக்கு வழங்கப்படும் மானியத் தொகையை  நிறுவனங்களிடம் பெற்று அவற்றிற்கு உரிய ரசீதை தலைமை ஆசிரியரிடம் இருந்து தீர்மானம் மூலம் பெறும் முறையை மாற்றி அவரவர் பள்ளியின் வளர்ச்சி தேவைக்கு மானியத்தொகை பயன்படுத்த வேண்டும்.

 

16. ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 1500 பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும்.

 

17. காலியாக உள்ள வட்டாரவளமையம் மேற்பார்வையாளர் பதவியினை உயர்நிலைப்  பள்ளித்தலைமையாரியர்களைக் கொண்டு நிரப்பவேண்டும்.

 

18 . டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறுபான்மைஆசிரியர்களைப் போல தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் மேலும் அவர்களுக்கு உரிய பணப்பலன்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் .


19. அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளை திறந்ததை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது மேலும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளையும் சுழற்சி முறையில் மாணவர்களின் நலன் கருதி திறக்கவேண்டும்

20. கொராணா பெருந் தொற்று முற்றிலும் குறையும் வரை கல்வி அமைச்சர் அறிவித்தவாறு பள்ளிகள் காலை 9.30 மணி முதல் 3.30 மணி வரை செயல்படவும் ,மாணவர்களின் உடலும் உள்ளமும் ஒரு சேர உள்ள நிலையில்சனிக்கிழமை வகுப்புகள் மாணவர்களின் வருகைப்பதிவையும் உற்சாகத்தையும் குறைக்கின்றது எனவே பள்ளிகள்  திங்கள் முதல் வெள்ளி வரைசெயல்பட ஆவண செய்ய வேண்டுகிறோம் .

21.ஆசிரியர்களுக்கு உயர் கல்வித் தகுதிக்கு வழங்கப்படும் உயர்கல்வி ஊக்கத்தொகை ஒருமுறை பெறக்கூடிய தொகையாக இல்லாமல் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஊக்க ஊதிய முறை தொடர ஆவண செய்ய வேண்டுகிறோம்

   மேற்கண்ட .கோரிக்கைகளை தாங்கள் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுத்தரும்படி தமிழ்நாடு ஆசிரியர்  சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.

                                    மாநிலத் தலைவர் பி கே இளமாறன்  

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment