தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகள் என இரு கட்டங்களாக நடைபெறும்,'' என, மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 12ல் நடக்கிறது
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி, மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அக்.,16 வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
வேட்புமனுத்தாக்கல் துவக்கம்: செப்டம்பர் 15
வேட்புமனுத்தாக்கல் முடிவு: செப்டம்பர் 22
வேட்புமனு பரிசீலனை: செப்டம்பர் 23
வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள்: செப்டம்பர் 25
முதல்கட்ட தேர்தல் தேதி: அக்டோபர் 6
இரண்டாம் கட்ட தேர்தல் தேதி: அக்டோபர் 9
ஓட்டு எண்ணிக்கை: அக்டோபர் 12
0 Comments:
Post a Comment