ஆசிரியர் பணிநியமனம் முரண்பாடு களைந்து வயதுவரம்பை ரத்துசெய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாகமாற்றி மகிழ்ச்சி பகிர்வதற்குள் பணிநியமனத்திற்கு வயது வரம்பு குறைக்கப்பட்டதால்
ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளார்கள்.லட்சம் பேர் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் பணிகிடைக்காமல் கூலி வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.இந்த கல்வியாண்டில் 5 லட்சம் புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளதால் படிப்படியாக ஆசிரியர் நியமனம் செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மத்தியஅரசு கல்வி உரிமை சட்டம் 2009 ல் கொண்டுவந்தபோது பலமாற்றங்கள் செய்யபட்டது. அதில் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று.
தமிழ்நாட்டில் 23.08.2010 முதல் ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது.நாடு முழுதும் லட்சக்கணக்கானோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் சான்றிதழ் 7 ஆண்டுகள் என்பதை வாழ்நாள் சான்றிதழாக மாற்றியது மனமகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்வில்லை. மேலும் தகுதியிருந்தும் வேலையின்றி வயதுமட்டும் கூடிக்கொண்டே வருவதால் ஆசிரியர் வயதுவரம்பு 40 இடஒதுக்கீட்டினருக்கு 45 வயது என்று நிர்ணயித்ததால் ஆசிரியர் பணி கனவாகி போனது. வயதுவரம்பை ரத்துசெய்து ஏற்கனவே இருந்தபடி பழையமுறையினையே பின்பற்ற வேண்டும். மேலும் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றும் மேலும் ஒரு சிறப்பு தேர்வு எழுதவேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு முரணாணது.ஆசிரியர் பணி நியமனத்தில் கடந்த ஆட்சிகாலத்தில் கடைப்பிடிக்கபட்ட முரண்பாட்டை களையவேண்டும்.
மேலும் தேர்வுவாரியக் குளறுபடியால் பாதிக்கப்பட்டிருக்கும்
2018-19 ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற 1500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவழங்கியபிறகே புதியத் தேர்விற்கானத் அறிவிப்பானை வழங்கவேண்டும்.தற்போதைய தேர்வு வவாரியம் அறிவிப்பை ரத்துசெய்து ஏற்கனவே தேர்ச்சிப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு பணி வழங்க
ஆவனச்செய்யும்படி மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment