அரசுக்கு ஒத்துழைப்போம்.
நம்மை தனிமைப்படுத்தி
கொரோனாவை தளிமைப்படுத்துவோம்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
உலகநாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவி தமிழ்நாட்டையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்தவேளையில் அரசு மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம்.
கைக்குலுக்குவதைத் தவிர்ப்போம்.
கட்டிப்பிடிப்பதை நிறுத்துவோம்
ஒரு மீட்டர் இடைவெளியில்
பேசுவோம்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் சார்பில் சென்னையில் ஏப்ரல் 5 ல் நடைபெற இருந்த மாநாடு மே மாதம் ஒத்திவைக்கப்படுகிறது.ஆகையால்,வட்டாரக் கூட்டம் முதல் மாவட்டக் கூட்டங்கள் வரை ஆயத்தக் கூட்டங்கள் நடத்த இருந்த அனைத்து நிகழ்வுகளையும் ஒரு மாதக் காலத்திற்கு தள்ளிவைத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ள
மார்ச்-22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறவுள்ள சுய ஊரடங்கினை வெற்றிப்பெறச் செய்வோம். அன்றையத்தினமே இரவு பகலாக தன்னலமின்றி மக்கள் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கைத்தட்டி நன்றி செலுத்துவோம்.
தமிழ்நாட்டின் கரவொலி டெல்லி செங்கோட்டை வரை கேட்கட்டும் தமிழ்நாட்டின் ஒற்றுமை கொரோனா வைரஸை தனிமைப்படுத்தட்டும்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment