பொதுமக்களின் நலன்கருதி கொரோனா வைரஸ் பரவமால் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகபள்ளி,கல்லூரிகளுக்கு மார்ச் -31 வரை விடுமுறை அளித்த தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி. மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
கொரோனா என்ற கொடுமையான வைரஸ் சீனாவில் தொடங்கி இத்தாலி, ஈரான் உள்ளிட்ட உலகநாடுகளையே குலைநடுங்க செய்து 3200 பேர்களை பலிவாங்கி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது இந்தியாவிலும் தொற்றிக்கொண்டது. ஆகையால் தமிழ்நாட்டில் தலையெடுக்க ஆரம்பித்தவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு நடவடிக்கையினை சிறப்பாக மேற்கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசு முதன்மை வகிக்கிறது என்றால் அது மிகையாகாது.
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், மால்கள் ,மக்கள் அதிகம் கூடும் இடங்களான விளையாட்டு அரங்குகள் அனைத்தும் மூட உத்தரவிட்டு பொதுமக்களை கொரோனா வைரஸை நுழைய விடாமல் தடுக்கும் சிறந்தமுடிவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
0 Comments:
Post a Comment