தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பு கருதி மார்ச் - 31 வரை பள்ளி மாணவர்களுக்கு விடுப்பு வழங்கிய தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி. மாநிலம் முழுதும் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
சீனா நாட்டில் தொடங்கி இத்தாலி,ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பில்லையென்றாலும், பக்கத்து மாநிலங்களில் கேரளா,கர்நாடகா பாதிப்பு பரவலாகி வருவதால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மாணவர்கள் நலன்கருதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பினைத் தவிர்த்து மற்றவகுப்பு மாணவர்களுக்கு தேர்வினை ரத்துசெய்து விடுமுறை அளித்து ஆவனச்செய்ய வேண்டுகிறோம். மேலும் கர்நாடகாவில் கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது. அதேவேளையில் குழந்தைகள் கடைபிடிப்பது சிரமங்கள் உள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. கேரளா புதுச்சேரி மாநிலங்களுக்கு தொடக்க நடுநிலை மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே குழந்தைகளின் நலன்கருதியும் தற்போது சளி இருமல் தும்மல் போன்றவை அதிகரித்துவருவதால் வைரஸ் குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கும் நோக்கத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவருமுன் காத்திடும் நோக்கில் எல்கே.ஜி ,மழலையர் வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்தும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்கள் கன்னியகுமரி நெல்லை தென்காசி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு மட்டும் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.அதேவேளையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலமுறை விழிப்புணர்வு குறித்து குழந்தைகளிடம் சொன்னாலும் பின்பற்றுவது இயலாதகாரியமாக உள்ளது. கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுவதால் எளிதில் பரவும் அபாயம் உள்ளது.ஆகையால் குழந்தைகளின் உடல் நலன்கருதி மாநிலம் முழுதும் Pre-KG முதல் 5 ஆம் வகுப்பு வரை மார்ச் 31வரை விடுமுறை வழங்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment