TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

இலவச இன்டர்நெட், 50 ஜிபி, 100 ஜிபி என்று. இது முற்றிலும் பொய். .இந்த மெசேஜ் உங்க வாட்ஸ் அப்ல வருதா? ஹேக்கராக இருக்கலாம்! உஷார்










இலவச ரீசார்ஜ், சலுகைகள் என ஆசை காட்டும் வார்த்தை ஜாலங்களுடன் வரும் மெசேஜ்களில் ஒரு அபாயகரமான லிங்க் இருக்கும்.
இதை மட்டும் நாம் கிளிக் செய்தால் நம் போன் ஹேக் செய்யபட அதிக வாய்ப்புள்ளது.

இதிலிருந்து தப்புவது எப்படி?
ரீசார்ஜ் இலவசம், நெட் பூஸ்டர் இலவசம் போன்ற விடயங்களை நிறுவனங்கள் அளித்திருந்தால் அதில் பெரும்பாலும் லிங்க் இருக்காது.
அப்படி இருந்தால் அது பொய் லிங்க் தான்.
உதாரணத்துக்கு http://www.bsnl.in/ என்பது போல, போலி பி.எஸ்.என்.எல் லிங்க் http://bsnl.co/sim என்று இருக்கும். இதிலிருந்து அந்த லிங்க் மற்றும் மெசேஜ் போலி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
இப்படி ஆபர் மெசேஜ் வந்தால் அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று அது உண்மைதானா என சோதனை செய்து கொள்ளலாம்.

கடந்த இரண்டு நாட்களாக எல்லா WhatsApp குழுக்களிலும் கொரோனா விழிப்புணர்வு பதிவுகளோடு சேர்த்து மற்றொரு பதிவும் வருகிறது.

இலவச இன்டர்நெட், 50 ஜிபி, 100 ஜிபி என்று.
இது முற்றிலும் பொய்.


இரண்டு விஷயங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

1.முதலாவது மற்றும் மிக மிக முக்கியமானது இலவச இன்டர்நெட் சம்மந்தமாக உங்களுக்கு வரும் லிங்க் அனைத்தும் பெரும்பாலும்  bitly லிங்க் ஆக  இருக்கும்.

இந்த bitly முறையை நாங்கள் தொழில் முறை  tracing/tracking காரணத்திற்காக உபயோகப் படுத்துவோம்.

அதன் மூலம் நீங்கள் அந்த லிங்க் click செய்யும் போது நீங்கள் எந்த இடத்திலிருந்து , அதாவது WhatsApp, twitter, Facebook, Google அல்லது மற்ற இணையதளம் , மொபைல் sms போன்ற எந்த குறிப்பிட்ட இடத்திலிருந்து ஓபன் செய்தார்கள் என எங்களால் கண்காணிக்க இயலும். 

ஒரு வேளை நாங்கள் தொழில் முறை அன்றி சற்று சட்டத்திற்கு புறம்பான நபர்களாக இருந்தால் ,

நீங்கள் எல்லாம் click செய்யும் போதே உங்களின் அனைத்து தகவல்களையும் அதாவது வங்கி தகவல், otp, account detail, message content, photos, video, contacts, GPS, email, call recording போன்றவற்றை உங்கள் மொபைல்/ கணினி இவற்றிலிருந்து எடுக்க முடியும்.

எனவே  ஆசைப்பட்டு உங்கள் தகவல்களை திருட வாய்ப்பு அளிக்காதீர்கள்.

2..உங்களுக்கு இலவச இன்டர்நெட் தரப்படுமெனில் அது உங்கள் நெட்வொர்க் provider  உங்களுக்கு தெரியப்படுத்துவர்.

அதற்கு நீங்கள் எந்த forward message, call, SMS செய்ய தேவை இல்லை.


நீங்கள் மற்ற குழுக்களுக்கு  ஒரு message ஒன்றை forward செய்தால் உங்களுக்கு இலவச இன்டர்நெட் கிடைக்கும் என்பது முற்றிலும் பொய்.

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment