TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

நாளை முதல் நிலவை நோக்கி சந்திரயான் பயணம்

சந்திரயான்-2 விண்கலம் நாளை அதிகாலை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி பயணிக்க உள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார். நிலவின் சுற்றுவட்டப் பாதையை 20-ம் தேதி சென்றடையும். பின்னர் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும் கூறினார்.
குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி யில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலை வர் கே.சிவன் கலந்துகொண்டார். அப்போது, சந்திரயான்-2 விண் கலத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சந்திரயான்-2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களுடன் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்டது. விண்ணில் ஏவப்பட்ட பிறகு, இந்த விண்கலம் 5 மாற்றங்களைக் கண்டுள்ளது.
சந்திரயான் தற்போது பூமியை சுற்றி வருகிறது. வரும் 14-ம் தேதி (நாளை) அதிகாலை 3.30 மணிக்கு மிக முக்கிய மாற்றம் நடக்க உள்ளது.
அப்போது பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி பயணிக்க உள்ளது. நிலவின் சுற்றுவட்டப் பாதையை 20-ம் தேதி சென்றடையும். பின்னர் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும். திட்டமிட்டபடி சந்திரயான் சிறப்பாக செயல் பட்டு வருகிறது.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment