TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பணிவான வேண்டுகோள் :


மதிப்புமிகு.ஐயா வணக்கம்.
SSA மற்றும்RMSA இணைப்பிற்கு பிறகு  சமக்ர சிக்ஷா வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ( BRTE)  இடமாறுதலின் போது தற்காலிக இடமாறுதலில்  ( DEPUTATION) வந்த BRTEக்களை அவர்களின் தற்காலிக பணியிட மாற்றத்தை ரத்துசெய்த பிறகு இடமாறுதல் கலந்தாய்வு நடத்திட ஆவனசெய்ய வேண்டுகின்றேன்.  தற்போது  தற்காலிக பணிமாற்றம் என்ற பெயரில் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருவதால் அந்த இடங்களுக்கு  மூத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது . உதாரணமாக காட்டுமன்னார்கோயிலிருந்தும், பரங்கிபேட்டையிலிருந்தும் அண்ணா கிராம ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டுள்ளவர்களை அவர்கள் சம்பளம் வாங்கும் இடத்திற்கே பணிமாறுதல் செய்தபிறகே  ஒருங்கிணைந்த  சமக்ரசிக்சாவிற்கு பணிமாறுதல் வழங்கிட. ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
 பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment