தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று கபசுர குடிநீர் வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி. மேலும் சென்னையில் கண்காணிப்பில் உள்ள ஒரு லட்சம் பேர்களுக்கு கபசுர குடி நீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் வழங்கிடம் மேலும் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தவேண்டும். உலகையே உறைய வொத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழ்நாட்டின் சிறப்பான நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தப்படிருப்பது வரவேற்புக்குரியது.ஆனால் பொதுமக்கள் அறியாமையால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால் நாளுக்குநாள் தொற்று அதிகரித்துவருகிறது. ஆகையால் ஊரடங்கை முழு ஊரடங்காக அமுல்படுத்தினால் மட்டும்தான் மேலும் பரவாமல் தடுக்கமுடியும். நோய்தொற்று பரவாமல் தடுத்திட மாநிலமுழுவதும் கபசுர குடிநீர் வழங்குவதனை விரிவுபடுத்தியும் அதனை நியாய விலைக்கடைகளில் இலவசமாக விநியோகிக்கவும் ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
0 Comments:
Post a Comment