TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

ஊரடங்கு எதிரொலி 1761 (IED) சிறப்பு பயிற்றுநர்களுக்கு சம்பளம் குறைப்பதை கைவிடக்கோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.






ஊரடங்கு எதிரொலி
1761 (IED) சிறப்பு பயிற்றுநர்களுக்கு சம்பளம் குறைப்பதை  கைவிடக்கோரி  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 2 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி , பயிற்சிகள் மற்றும் அரசுநலத்திட்ட உதவிகள் பெற்று தரும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சிறப்பு பயிற்றுநர்கள் 1998 ல் ரூபாய் 3500  தொகுப்பூதியத்தில் 1761 பேர் பணிநியமனம் செய்யப்பட்டார்கள்

1998 முதல் 2002 வரை மாவட்ட தொடக்க கல்வி திட்டம் (DPEP) பணிபுரிந்து வந்தனர்..2002 முதல் 2012 மே மாதம் வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) வாயிலாக தொண்டு நிருவனங்களின் (NGO) மூலமாக பணிபுரிந்து வந்தனர். தற்போது 2018  முதல் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் (Samagra Shiksha) பணிபுரிகின்றனர்.

NGO-க்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த காரணமாக 2012 ஜுன் மாதம் தொண்டு நிருவனங்களை அடியோடு இரத்து செய்துவிட்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தை தமிழக அரசு பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சிறப்பு பயிற்றுநர்களை வட்டார வள மையங்களில் (பி.ஆர்.சி) பணியமர்த்தியது..

MHRD வழிக்காட்டுதல் படி 2015 ஆண்டு ஜூன் மாதம் மாற்றுத்திறன் மாணவர்கள் அதிகம் பயிலும் அரசுப்பள்ளிகளில் சிறப்பு பயிற்றுநர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டனர்.
தற்போது தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இக்காலத்தில் தான் நேரடியாக மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து சிறப்பு பயிற்றுநர்களின் வங்கி கணக்குக்கு வந்த ஊதியம் VEC/SMC க்கு வந்து அங்கிருந்து எங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பும் நடைமுறை பகுதிநேர ஆசிரியர்கள் போன்று சிறப்பு பயிற்றுநர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டுவருகிறது.

தமிழக அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் பார்வைகுறைபாடு , செவித்திறன் குறைபாடு , கை கால் இயக்க குறைபாடு , ஆட்டிசம் , மூளை முடக்கு வாதம் , மனவளர்ச்சி குறைபாடு கற்றல் குறைபாடு , அதீத துறுதுறு செயல்பாடு கொண்டவர்கள் என 21 வகையான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவரவர்கள் பள்ளிக்கே சென்று கல்வி, பயிற்சி, சேவை மற்றும் வழிகாட்டல் செய்து பணியாற்றிவருகின்றார்கள்.
இதில் மத்திய அரசு ( MHRD ) மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக ஆண்டுத்தோறும் 12 மாதங்களுக்கு 34 கோடி நிதியினை வழங்குகிறது..
    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கு உத்தரவிட்டுள்ளதால்  சிறப்பு பயிற்றுநர்கள்  பள்ளிக்குசென்று பார்வையிடுவதில்லை அதனால் பள்ளி பயணப்படி ரூ.2000  இம்மாத ஊதியத்தில் வழங்கப்படாது. ஊதியத்திற்கான சம்பளபட்டியல் தயாரிக்கும்போது ரூ.2000 த்தை பிடித்தம்செய்து சம்பளபட்டியல் அனுப்பும்படி முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் வாட்சப் மூலம் செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.  சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊரடங்கை காரணம் காட்டி ரூ.2000 த்தினை பிடித்தம்செய்வது பெரும் அதிர்ச்சியும்  மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கே ஊரடங்கு காலத்தில் எவ்விதகாரணம் காட்டியும் சம்பளம் பிடித்தம் செய்யகூடாது என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் அரசுபப்பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்வது வருத்தத்தையளிக்கிறது  ஆகையால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு பயிற்றுநர்களின் வாழ்வாதாரத்தினைகருத்தில்கொண்டு சம்பளம் குறைப்பின்றி ஊதியம் வழங்க ஆவனசெய்யுமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிந்து வேண்டுகின்றேன். பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

2 Comments: