TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

அரசு சம்பளம் வழங்கியும் பெறமுடியாமல் 11,700 பகுதிநேர ஆசிரியர்கள் தவிப்பு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை


அரசு  சம்பளம் வழங்கியும் பெறமுடியாமல் 11,700 பகுதிநேர ஆசிரியர்கள் தவிப்பு  நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை
       அரசாணை 177 நியமனம் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூபாய் 5000 சம்பளத்தில்  தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில்
மார்ச் 2012 ஆண்டு நியமிக்கப்பட்டார்கள்.    பல்வேறு காரணங்களினால் பணியிலிருந்து விலகலுக்குப்பிறகு  தற்போது 11,700 பேர்  மாநிலம் முழுவதும் உடற்கல்வி,ஓவியம்,இசை ஆசிரியர்களாக மாதத்திற்கு 12 நாள்கள் பணிபுரிந்து வருகிறார்கள் தற்போதைய சம்பள்  ரூ.7700 வழங்கப்பட்டுவருகிறது.சம்பளம் மாநிலத்திட்ட இயக்குநரகம் மூலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு வட்டார வளமையம் மூலமாக பள்ளிகளின் அனைவருக்கும் கல்வி இயக்கம் SSA காணக்கில் வரவு வைக்கப்பட்டு அந்த கணக்கினை நிருவகிக்கும்  பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு SMC தலைவர் ஆகிய இருவரின் கையொப்பம் மிட்ட காசோலையினை பகுதிநேர ஆசிரியர்களுக்குரிய மாதச்சம்பளத்தினைஅவரவர் வங்கி கணக்கில்  ECS மூலமாக வழங்கிவருவது வழக்கத்தில் உள்ளது.
இம்முறை கொரோனா தடுப்பு நடவடிக்கை 144 தடை உத்தரவால் மார்ச் மாத சம்பள காசோலையில் கையெழுத்திடும் தலைமையாசிரியரும் SMC தலைவரும் பள்ளிக்கு வராததால் பள்ளிக்கணக்கில் சம்பள பணத்தினை செலுத்தியபிறகும் பகுதிநேர ஆசிரியர்கள் சம்பளம் வங்கியில் அவரவர் கணக்கில் செலுத்தப்படாமல் சிக்கலில் உள்ளது.இதனால் நெருக்கடியான சூழலில் சம்பளமின்றி தவித்துவருகிறார்கள். எனவே SMC கணக்கில் இருந்து பகுதிநேர ஆசிரியர்கள் வங்கி கணக்கில் சம்பளம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்தும் இனிவரும் காலங்களில் வட்டார வளமையங்கள் மூலமாக பகுதிநேர ஆசிரியர்களின் வங்கி கணக்கில் நேரிடையாக வரவுவைக்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment