12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 10 ஆம் வகுப்புப்பொதுத் தேர்வு நடத்துதல் உள்ளிட்ட கல்வித்தொடர்பான அறிவிப்புகளில் பின்வரும் கருத்துகளை பரிசீலனை செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை
ஆன்லைன் மூலம் 12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்திட ஏதுவாக விடைத்தாள்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு இல்லாதபட்சத்தில் குறிப்பிட்ட விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைத்து திருத்துவதைத் தவிர்த்து ஆசிரியர்களின் பாதுகாப்புகருதி அந்தந்த மாவட்டங்களை திருத்தும் மையங்களை அதிகரித்தும் போக்குவரத்துவசதியில்லாமையும் கருத்தில் கொண்டு விடைத்தாள் திருத்தும் மையங்களை அமைத்திடவேண்டுகிறேன். இதுவரை ஒரே மையத்தில் நூற்றுகணக்கான ஆசிரியர்கள் எல்லா பாடத்திற்காகவும் திருத்துவதால் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. தற்போது பேரிடர் காலத்தில் அசெளகரியமும் சமூக விலகலாகவும் அமையாது. ஆகையால் கொரோனா பரவல் எதிரொலியால் இம்முறை 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்கள் பாட வாரியாக அமைத்திட்டால் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அமைந்திடும். விடைத்தாள் திருத்தும் மையங்களை அதிகரித்து ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டுகிறேன்.
மேலும் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் உள்ளார்கள். தேர்வு நடத்துவதாக முடிவெடுத்தால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 10 நாட்களாவது பள்ளிக்குவந்து பயிற்சி எடுத்தால் மட்டுமே தன்னம்பிகௌகையோடு தேர்வு எழுதுவார்கள். எனவே 10 ஆம் வகுப்பு தேர்வு குறித்து உறுதியான அறிவிப்பு வெளியிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
0 Comments:
Post a Comment