5 %அகவிலைப்படி உடனே வழங்கிடுக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
இந்தியாவின் பொருளாதார விலைவாசி ஏற்றம் இறக்கம் அடிப்படையில் புள்ளியியல் கணக்கீட்டின்படி ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி அரசில் பணிப்புரியும் அனைவருக்கும் வழங்கிவருவது நடைமுறையில் உள்ளது.அதனடிப்படையில்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்தவுடன் மாநில ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கும் மாநில அரசு உடனடியாக வழங்கிவருவது வழக்கம்.தற்போது மத்திய அரசில் பணிபுரிபவர்களுக்கு 5 % அகவிலைப்படி உயர்த்தி கடந்த வாரம் அறிவித்தது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கீழ்ப்பணிப்புரியும் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கும் தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் ஐந்து சதவீத அகவிலைப்படியினை உயர்த்தி வழங்கிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறுத்துகின்றோம். மேலும், அகவிலைப்படியினை 01.07.2019 முதல் வழங்கி நிலுவைத்தொகையினை ரொக்கமாக வழங்குவதன் மூலம் ஆசீரியர்-அரசு அலுவலர்கள்,ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்கள்,குடும்ப ஓய்வூதியத்தாரர்கள் உள்ளிட்ட 18 லட்சம் பேர்களின் சுமார் ஒன்றரைக்கோடி குடும்பங்கள் மகிழ்ச்சியோடு தீபாவளி பண்டிகையினை கொண்டாடுவார்கள். மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் பண்டிகை நெருங்குவதால் ஐந்து சதவீதம் அகவிலைப்படியினை உடனே வழங்கிடஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment