தீபாவளியினை மகிழ்ச்சியாக கொண்டாடிட 28 ந்தெதி ஈடு செய்யும் விடுப்பு வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று விடுமுறை அறிவித்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை
இந்தவருடம் தீபாவளி எதிர்வரும் 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பெரும்பாலும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் வேலை செய்வதில்லை.பல்வேறு மாவட்டங்களில் பல கிலோ மீட்டர் தொலைவில் பணிபுரிந்துவருகிறார்கள். அனைவரும் தீபாவளி நாளினை கொண்டாடிவிட்டு அன்றே வெளியூரிலிருந்து பணிக்குத் திரும்புவது மிகவும் சிரமம் ஏற்படுத்துவதோடு மன உளைச்சலையும் ஏற்படுத்தும். தீபாவளி நன்னாளை குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் தீபாவளி மறுநாளான திங்கள் கிழமையினை விடுமுறை நாளாக அறிவிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று 28.10.2019 திங்கள் கிழமையினை ஈடு செய்யும் விடுப்பாக அறிவித்து விடுமுறை நாளான சனிக்கிழமையன்று 09.11.2019 வேலைநாளாக அறிவித்து ஆணைப்பிறப்பித்த ,மாண்புமிகு.
முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment