தொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன்
அறிக்கை.
கொரோனா பரவலை தடுக்க
தீவிரநடவடிக்கைகள் எடுத்துவரும் மத்திய-மாநில அரசுகளை பாராட்டி மகிழ்கிறோம். நாடு முழுவதும் பெருந்தொற்று கொரோனா மக்களை மிரட்டிவரும் நிலையில் நோயிலிருந்து மக்களை காக்க மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். தற்போது அதிக மருத்துவர்கள் தேவை அவசியமாகிறது. இந்நிலையில் மக்கள் சக்திக்கு எதிராக நாளுக்குநாள் கொரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்துவருகிறது.
பேரிடர் காலக்கட்டத்தில் மக்களைக் காப்பாற்றுவதே முதன்மையான தாகும்.ஆகையால், நீட் தேர்வு ஜூலை 26 ந்தேதி நடத்தப்பட. உள்ள நிலையில் மாணவர்கள்-பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் ஊரடங்கு காலத்தில் வயிற்றுப்பசியாற்றுவதற்கே திண்டாடும் நிலையில் நீட் தேர்வை எதிர் கொள்ள உடலும் உள்ளமும் சீரான நிலையில் இல்லை. நாடு முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத பதிவுசெய்தவர்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளார்கள். இதில் 20,000 பேர் அரசுப்பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது. மின்னல் வேகத்தில் கொரோனா பரவி நாடு முழுவதும் 5, லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் ,70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா எப்போது முடிவுக்குவரும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத சூழலில் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாராம் இழந்து தவிக்கும்நிலையில்
நீட் தேர்வு எழுதுவது சாத்தியமில்லை. மாணவர்களின் நிலைக்குறித்து பெற்றோர்கள் பெரும் அச்சத்திலும் மனஉளைச்சலிலும் உள்ளார்கள்.அரசுப் பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு போதிய வசதியின்றி தவிப்பதும் வெளியே வராத சூழலிலும், இணையதள வசதி இயக்கம் சரிவர தொடர்பு இல்லாததாலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெரும்பாதிப்பிற்கு உள்ளாவார்கள். தேர்வு நடந்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள்.மேலும் தற்போது மருத்துவர்களின் தேவையின் அவசியத்தினை கருத்தில் கொண்டு . பேரிடர் காலம் என்பதால் நீட் தேர்வினை ரத்துசெய்து பழைய முறையான பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவசேர்க்கை யினை செயதிட ஆவனசெய்யவேண்டும். இல்லையேல் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு மாநிலஅரசே ஒரு நுழைவுத்தேர்வு வைத்து தேர்வுசெய்து இடமளிக்கலாம். எனவே, மேலும் பெற்றோர்கள் மாணவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் நீட் தேர்வினை ரத்துசெய்ய மத்திய அரசினை வலியுறுத்தும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment